Turmeric Grow Bags

மஞ்சள் விவசாயம் - பூமிக்கு மேல்.
அறிமுகப்படுத்துகிறோம்! இந்தியாவில் முதல்முறையாக, குறைந்த முதலீட்டில், எங்களது " பூமிக்கு மேல் விவசாயம்" (Above the Ground Farming) அமைப்பின் மூலம்,குறுகிய காலத்தில், அதிக அளவு மஞ்சள் அறுவடை செய்யலாம்.
Focussed Farming:
இது ஒவ்வொரு செடியையும், தனித்தனியாக சிறப்பு பராமரிப்பு, செய்வதன் மூலம், மிகக் குறைந்த முதலீட்டில் அதிக அளவு லாபம் பார்க்க முடியும்.!
இறக்குமதி செய்யப்பட்ட, செடி பைகளை (Growbags), பூமிக்கு மேல் வைத்து, பிரத்தியேகமாக, உரங்கள் இட்டு வளர்க்கும் முறையாகும்.
இதன் மூலம் ஒரு செடியில் இருந்து குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து கிலோ வரை பச்சை மஞ்சள் அறுவடை செய்ய முடியும்.
மஞ்சள் விவசாயிகளின் தற்போதைய பிரச்சனைகள்:
விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் அதிகம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவர்களின் தினசரி கூலி மிகவும் அதிகமாக இருக்கிறது. கூலிக்கு ஏற்ற வேலை முழுமையாக செய்யப்படுவதில்லை.
1) நிலத்தை தயார் படுத்துவதற்கு எரு மாட்டு சாணம் அல்லது ஆட்டு எரு கொட்டுவது, 2)9 கலப்பை, 5 கலப்பை, rotractor, மற்றும் டிராக்டர் கொண்டு செய்யும் வேலைகள், 3) பாத்தி அமைத்தல், 5) பாத்திகளை சீர் செய்தல், 6) விதை மஞ்சள் விதைத்தல், 7) தண்ணீர் கட்டும் வேலை மற்றும் அதற்கு உண்டான கூலி, 8) கலைக்கொல்லி மருந்து அடித்தல், 9) களைகளை அடிக்கடி பிடுங்குதல் மற்றும் அதனுடைய ஆட்கள் கூலி, 10) மஞ்சள் கிழங்கு மேல் மண் மூடுதல் வேலை, 11) கால் மாற்றுதல் ஆட்கள் கூலி, 12) அறுவடை ஆட்கள் கூலி, போன்றவற்றில் மட்டுமே ஒரு ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவாகிறது.
விலை இல்லாத பொழுது நீண்ட நாட்கள் மஞ்சளை சேமிக்கும் பொழுது, பூச்சி தாக்குதலுக்கு உட்பட்டு மஞ்சள் வீணாகிறது. அதற்கு புகை போடும் வேலைகளில், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும், அதற்கு உண்டான உபகரணங்களுக்கும், ஆட்கள் கூலிக்கும் செலவு அதிகமாகின்றது.
மஞ்சள் விற்பனை விலை விவசாயிகளின் கைகளில் இல்லை.
தீர்வுதான் என்ன?
எனவே லாபங்களை, உற்பத்தி செலவுகளை குறைப்பதன் மூலமே அதிகம் பெற முடியும். எனவேதான், நாங்கள் பூமிக்கு மேல் விவசாயம், மாடலில், செடிப்பைகளை கொண்டு, பூமிக்கு மேல் விவசாயம் செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் என நிரூபித்துள்ளோம்.
சுபிக்ஷா செடிப்பைகளின் மூலம் மஞ்சள் தேடி பயிர்களின் மூலம் மஞ்சள் சாகுபடி செய்யும் பொழுது, மேற்கண்ட அத்தனை செலவுகளையும் முழுமையாக தவிர்க்க முடியும்.
சுபிக்ஷா செடிப்பைகளைக் கொண்டு, பூமிக்கு மேல் விவசாயம் செய்யும் வழிமுறை:
மஞ்சள் விளையும் மஞ்சள் விளைவிக்கும் நிலத்தை ஏர் ஓட்ட, மற்றும் பாத்தி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
சுபிக்ஷா செடிப்பைகள், (200 GSM )14 இன்ச் நீளம் x 14 இன்ச் அகலம்x 12 இன்ச் உயரம் உள்ள அளவுகளில் கிடைக்கும்.
பைகளை வரிசையாக அடுக்கி, அதில் செறிவூட்டப்பட்ட மண், தேங்காய் நார் தூள்கள் கொட்டலாம்.
தேவைப்படும் உரங்களை பைகளின் உள்ளே கொட்டலாம்.( கொட்டிய உரங்கள் பையைத் தாண்டி வெளியே செல்லாது).
விதை நேர்த்தி செய்யப்பட்ட, 3 மஞ்சளை பைகளுக்குள் விதைக்கலாம்.
நிலத்தின் இருமுனைகளிலும் ஒன்றரை அடி அளவில் சவுக்கு அல்லது மூங்கில் குச்சிகள் நட்டு, அதை நைலான் கயிறுகளில் இணைத்து, சொட்டுநீர் பாசன பைப்புகளை கட்டி, அதிலிருந்து செடிகளுக்கு தண்ணீர் வருமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். ( இது ஒரு முறை செய்யப்படும் முதலீடு ஆகும்).
பைகளில் வளர்ப்பதினால். மஞ்சள் ஆறு மாத காலத்திற்குள் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
பைகளை தலைகீழாக கமுத்தினால், மஞ்சள் அறுவடை ஆகிவிடும்.
ஒரு பையில் மூன்று முதல் ஐந்து கிலோ வரை பச்சை மஞ்சள் தாராளமாக கிடைக்கும்.
அதே செறிவூட்டப்பட்ட மண்ணை, கொஞ்சம் அதிகமாக உரங்கள் போட்டு அடுத்த போகத்திற்கு, இதே இதே பைகளை வைத்து, தொடங்கலாம்.
Shopping Cart
Scroll to Top